அமைச்சரிடம் ஆதரவு திரட்டிய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்

அமைச்சரிடம் ஆதரவு திரட்டிய கம்யூனிஸ்ட்  வேட்பாளர்கள்
X

அமைச்சர் பொன்முடியை சந்தித்து ஆதரவு கோரிய கம்யூனிஸ்ட் கட்சியினர்

விழுப்புரத்தில் சிபிஎம் வேட்பாளர்கள் திமுக அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து உள்ளாட்சித்தேர்தலுக்கு ஆதரவு திரட்டினர்

விழுப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முகையூர் ஒன்றியம், வீரபாண்டியில் மாவட்ட குழு உறுப்பினர் மகேஸ்வரியும், காணை ஒன்றியம், அத்தியூர் திருக்கையில் சடையப்பனும், வானூர் ஒன்றியம், பொம்மையார்பாளையத்தில் வளர்மதியும், கண்டமங்கலம் ஒன்றியம் முட்ராம்பட்டில் வீரம்மாளும் போட்டியிடுகின்றனர்,

இவர்கள் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி தலைமையில் திமுக அமைச்சர் க.பொன்முடி மற்றும் மாவட்ட செயலாளர் புகழேந்தி ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு கோரினர்,

அவர்களுக்கு அமைச்சர் க.பொன்முடி, மாவட்ட செயலாளர் புகழேந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர், அப்போது மாவட்ட சிபிஎம் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் என்.சுப்பரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், எஸ்.முத்துகுமரன், ஆர்.மூர்த்தி,சு.வேல்மாறன், ஒன்றிய செயலாளர் கே.குப்புசாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.சௌந்தராஜன், பி.சிவராமன், ராஜீவ்காந்தி, அபிமண்ணன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!