விழுப்புரம் மாவட்டத்தில் 9 இடங்களில் வாக்கு எண்ணும் பணி தொடக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் 210 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணி 9 வாக்கு எண்ணிக்கை மையத்தில் இன்று காலை8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில்விழுப்புரம் நகராட்சியில் 42 வாா்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இ.எஸ். கலை கல்லூரியிலும், திண்டிவனம் நகராட்சியில் 33 வாா்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை, திண்டிவனம் புதுச்சேரி சாலையில் உள்ள புனித அன்னாள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வாா்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை பேரிடா் மேலாண்மை புயல் பாதுகாப்பு மைய வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வளவனூா் பேரூராட்சியின் வாக்கு எண்ணிக்கை வளவனூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ள்யிலும், விக்கிரவாண்டி பேரூராட்சியின் வாக்கு எண்ணிக்கை விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மரக்காணம் பேரூராட்சியின் வாக்கு எண்ணிக்கை மேல வீதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும், திருவெண்ணெய்நல்லூா் பேரூராட்சியின் வாக்கு எண்ணிக்கை காந்தி நினைவு மேல்நிலைப் பள்ளியிலும், அரகண்டநல்லூா் பேரூராட்சியின் வாக்கு எண்ணிக்கை டி.தேவனூரில் உள்ள லட்சுமி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியிலும்,செஞ்சி, அனந்தபுரம் இரு பேரூராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை செஞ்சி ராஜா தேசிங்கு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணபடுகின்றன, இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது..முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டு வருகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu