விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை தடுக்க ஆலோசனை மையம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் விபரீதமான முடிவு எடுப்பதை தடுக்க மருத்துவ ஆலோசனை மையத்தை அணுகலாம் என கலெக்டர் ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதி குறைவான மதிப்பெண் மற்றும் தேர்ச்சி பெறாத காரணங்களினால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான மாணவ- மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறுதல், தற்கொலை செய்தல் போன்ற விபரீதமான முடிவுகளை எடுக்கின்றனர். இதனை தடுக்கும்பொருட்டு மாணவ- மாணவிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் பெற 104 என்ற இலவச அரசு மருத்துவ ஆலோசனை மையத்தை அணுகலாம்.
அதேபோல் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை 04146-290659 என்ற தொலைபேசி எண் மற்றும் குழந்தைகளுக்கான 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணையும் அணுகி ஆலோசனை பெறலாம். மேலும் அரசு பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் மற்றும் தேர்ச்சி பெறாத குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் தேர்வின் மதிப்பெண்ணை மறுபரிசீலனை செய்யவும், தேர்வில் தோல்வியுற்ற குழந்தைகளிடம் மறுதேர்வு எழுதுவதற்கான ஆலோசனைகள் அளித்தல் வேண்டுமெனவும் அறிவுறுத்தப்படுகிறது என்ற தகவலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அதில் தெரிவித்துள்ளாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu