அமைப்பு சரியில்லையெனில் 50 கோடி செலவு செய்தாலும் ஜெயிக்க முடியாது: சி.வி.சண்முகம்

அதிமுக அமைப்புத் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்
விழுப்புரம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக அமைப்புத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, நடைபெற்றது,
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கலந்து கொண்டு பேசுகையில், அதிமுக அமைப்பு தேர்தல் 22 ,23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும், நமக்கு அடிப்படை சரியில்லை என்றால், வருகின்ற தேர்தலில் 50 கோடி ரூபாய் செலவு செய்தாலும் ஜெயிக்க மாட்டோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஒற்றுமையாக அமைப்பு தேர்தலை முடித்து, தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்,
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகபட்டினம் மாவட்ட அவைத்தலைவர் ஜீவானந்தம், எம்எல்ஏ சக்கரபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu