அடையாளம் தெரியாத சிறுவன் சடலம்: விழுப்புரத்தில் பரபரப்பு

அடையாளம் தெரியாத சிறுவன் சடலம்: விழுப்புரத்தில் பரபரப்பு
X

சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட சிறுவன் உடல்

விழுப்புரத்தில் திருச்சி சென்னை நெடுஞ்சாலை ஓரம் அடையாளம் தெரியாத சிறுவன் சடலமாக மீட்கபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் நகராட்சி பகுதியில் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் டூ வீலர் விற்பனையகம் அருகே துணிகள் அயர்ன் வண்டியில் ஒரு சிறுவன் படுத்திருந்தான், விடிந்து வெகு நேரம் ஆகியும் அவன் எழுந்து கொள்ளவில்லை,

சந்தேகம் அடைந்த அப்பகுதியில் வழியாக சென்றவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், அங்கு விரைந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார், சிறுவனை எழுப்பி பார்த்தனர், சிறுவன் அசைவற்று, இறந்து கிடந்தான்.

உடனடியாக போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத சிறுவன் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

அப்பகுதியில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!