விழுப்புரம் சட்டக் கல்லூரி விடுதியில் கொரோனா சிகிச்சை மையம்: ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் சட்டக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் த. மோகன்
விழுப்புரம் சட்டக்கல்லூரி மாணவர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் த.மோகன் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா மற்றும் ஓமைக்ரான் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், விழுப்புரம் பிடாகம் கிராம ஊராட்சியில், உள்ள அரசு சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் த. மோகன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு படுக்கை வசதிகளுடன், குடிநீர், கழிவறைகள் மருத்துவர்கள் சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை மேற்கொள்வதற்காக மருத்துவர் அறைகள் உள்ளிட்டவைகளை உடனடியாக ஏற்படுத்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu