கொரானா விதிமுறை மீறல்: கறி கடைகளுக்கு ரூ.5000 அபராதம்!

கொரானா விதிமுறை மீறல்: கறி கடைகளுக்கு ரூ.5000 அபராதம்!
X

விதிமுறைகளை மீறிய கறிக்கடை

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நடைமுறைப்படுத்தி உள்ள விதிமுறைகளை மீறிய கறிகடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சில கடைகள் விதிமுறைகளை மீறி செயல்படுவது கண்காணிம்ககப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகரம் கிழக்கு சண்முகபுரம் காலனி பகுதியில் இயங்கி வரும் பிஸ்மில்லா சிக்கன் சென்டர் மற்றும் பிஸ்மில்லா மட்டன் சென்டர் கடை உரிமையாளர் மற்றும் கிழக்கு பாண்டி சாலையில் இயங்கி வரும் பாஷா மட்டன் சென்டர் கடையில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் வியாபாரம் செய்து வந்தனர்.

எனவே கடை உரிமையாளர்க்கு தலா ரூ.5000 அபராதமும், இதேபோன்று வளவனூர் பகுதியில் கறி கடை நடத்தி வந்த உரிமையாளர்க்கு ரூபாய் 5000 அபராதம் விதித்து விழுப்புரம் வட்டாட்சியர் வெங்கடசுப்பரமணியன் நடவடிக்கை எடுத்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!