புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி.

விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

வெளிமாநில தொழிலாளர்களை பாதுகாத்திடும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பழனி தகவல் தெரிவித்துள்ளார்.

புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் பணிபுரிவதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் புலம்பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களின் நலனை பாதுகாத்திடவும், சுதந்திரமாக பணிபுரிவதை உறுதி செய்யும் வகையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இன்று (திங்கட்கிழமை) முதல் செயல்பட உள்ளது.

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் வெளி மாநில தொழிலாளர்களை பணியமர்த்தி உள்ள நிறுவன உரிமையாளர்கள் அவர்களின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் உறுதி செய்திட வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் 24 மணி நேரமும் செயல்படும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04146- 263265 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

வெளி மாநில தொழிலாளர்களை பாதுகாப்பது நமது தலையாய கடமை மற்றும் பொறுப்பு ஆகும். எனவே இதனை அனைத்து தொழில் நிறுவனங்களும் பின்பற்றிட வேண்டும். என்ற தகவல் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஓட்டல், தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் வெளி மாநிலத்தைச்சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உடனடியாக அவர்கள் பணி செய்யும் இடத்திற்கு நேரில் சென்று அவர்களை சந்தித்து இணையதள வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறி பாதுகாப்பு நாங்கள் தருகிறோம் என மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai powered agriculture