விழுப்புரத்தில் விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்
லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் நகரில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு விழுப்புரம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் பேசுகையில், விழுப்புரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு அறை எடுத்து தங்க வருபவர்களிடம் அறை ஒதுக்குவதற்கு முன்பாக அவர்களது ஆதார் அட்டையை கட்டாயம் பெற்று அதனை சரிபார்த்த பிறகே அவர்களுக்கு அறை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும். தனியாக வரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்த காரணத்தை கொண்டும் தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு அனுமதிக்கக்கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,அதேபோல் விபசாரத்திற்காக அறை ஒதுக்கியது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதி ஊழியர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்,
குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் உள்ளேயும் வெளிப்புறத்திலும் கட்டாயம் சி.சி.டி.வி. கேமராவை பொருத்த வேண்டும். அதுபோல் அனைத்து திருமண மண்டபங்களிலும் உள்ளேயும் வெளிப்புறங்களிலும் கட்டாயம் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட வேண்டும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு வாகனங்களில் வருபவர்கள் அவர்களது வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தாமல் இருக்க வேண்டும், இதனை அந்தந்த திருமண மண்டப உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu