ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம்

ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம்
X

கோலியனூர் ஒன்றிய உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் நடத்திய ஆலோசனை கூட்டம் 

கோலியனூரில் கலெக்டர் தலைமையில் புதிய ஊராட்சி மன்ற தலைவர்களுடன் வளர்ச்சி திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை திறம்படச் செய்யும் ஊராட்சிக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் நூறு நாள் வேலையில் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஊராட்சி மன்ற நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதுவலர்கள் மூலம் பல்வேறு கொரோளா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளை துரிதப்படுத்தும் விதமாக 13 ஒன்றியங்களுக்குட்பட்ட புதிய ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று கோலியனூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 42 ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட 45 ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், பொதுமக்களின் நேரடி தொடர்பில் உள்ள புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற நலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகம் அவ்வப்பொழுது அறிவுறுத்தும் பணிகளையும், கொரோளா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும், இதுவரை முதல் தவணை செலுத்தாத நபர்களை ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இப்பணியில் சிறப்பாக செயல்பட்டு 100 சதவீதம் இலக்கை எட்டும் ஊராட்சிக்கு அமைச்சர் மஸ்தான் தங்க நாணயம் பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார்கள். ஆகையால் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும். தங்க நாணயம் பெறும் அளவிற்கு பணியாற்றிட வேண்டும்.

பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டப்பணிகளை நேரடியாக உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தான் கொண்டு சேர்க்கப்படுகிறது. இதில் குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், கவனமுடன் பணியாற்றி சிறப்பான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் தவறான பயனாளிகள் சேர்க்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டால், தொடர்புடைய ஊராட்சி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை திறம்பட செய்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்தார்.

கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil