விழுப்புரத்தில் தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம்

விழுப்புரத்தில் தேர்தல் குறித்த ஆய்வு  கூட்டம்
X

விழுப்புரத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் குறித்த ஆய்வுக்கூட்டம் 

விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தேர்தல் நடத்தும் அலுவலர், பறக்கும் படையினர், காவல்துறையினர் மற்றும் பல்வேறு நிலைகளில் தேர்தல் பணி ஈடுபடும் அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான த.மோகன் தலைமையில் இன்று (31.01.2022) நடைபெற்றது.

அப்போது திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ர.சங்கர், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திருமதி.பூ.காஞ்சனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பூ.ராமகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா