விழுப்புரத்தில் தேர்தல் மண்டல அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
X
தேர்தல் மண்டல அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
By - P.Ponnusamy, Reporter |7 Oct 2021 9:10 PM IST
விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் மண்டல அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகின்ற 9 ந்தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டருமான த.மோகன் தலைமையில் இன்று (07.10.2021) நடைபெற்றது.
கூட்டத்தில் தேர்தல் அமைதியாக, பாதுகாப்பான முறையில் எப்படி நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது, அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராமகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu