விழுப்புரத்தில் காங்கிரஸ் பாதயாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சி

விழுப்புரத்தில் காங்கிரஸ் பாதயாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சி
X

விழுப்புரத்தில் நடந்த காங்கிரஸ் பாதயாத்திரை நிறைவு விழாவில் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேசினார்.

விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின பாதயாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் 75-ம் ஆண்டு சுதந்திர தின பவள விழாவையொட்டி பாதயாத்திரை விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் நடைபெற்றது. இதற்கு மத்திய மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசகுமார் தலைமை தாங்கினார்.

மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, மாநில துணைத்தலைவர்கள் செந்தமிழ் அரசு, குலாம்மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மகாத்மாகாந்தி, ராஜீவ்காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பாதயாத்திரையை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து, விழுப்புரம் சிக்னல் அருகில் உள்ள 75-ம் ஆண்டு பவள விழா நினைவுக்கொடி கம்பத்தில் கொடியேற்றி வைத்து அங்குள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் அகில இந்திய உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, மாநில செயலாளர் தயானந்தம், மாநில செயற்குழு உறுப்பினர் பாபுசத்தியமூர்த்தி, நகர தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், நகரமன்ற கவுன்சிலர்கள் இம்ரான்கான், சுரேஷ்ராம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வாசிம்ராஜா, மாவட்ட துணைத்தலைவர்கள் விஜயரங்கன், ராஜ்குமார், நாராயணசாமி, குப்பன், மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் விஸ்வநாதன், சேகர், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தன்சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!