விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் பாஜகவினர் புகார் மனு

மனு அளிக்க வந்த பாஜகவினர்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒழிந்தியம்பட்டு கிராம ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பிரதமர் நரேந்திர மோடிஆகியோர் குறித்து தரக்குறைவாகவும், இழிவு படுத்தி பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டி விழுப்புரம் மாவட்ட பட்டியல் அணி சார்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிடம் பட்டியல் அணி விழுப்புரம் மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் மனு அளித்தனர்.
இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மனுவின் மூலம் கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்வின் போது பட்டியல் அணி மாநில செயற்குழு ரகு, பொதுச்செயலாளர் நாகபசம், துணைத் தலைவர்கள் தயவுசெயாமணி, ரஜினி, பழனி, பட்டியல் அணி நிர்வாகிகள் ராதிகா, மகாதேவன், சக்திவேல், குப்பன், செல்லா, ஜோதிராஜா, விழுப்புரம் மாவட்ட பொது செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் சுகுமார், நகரத் தலைவர் வடிவேல் பழனி, நகர துணைத் தலைவர் சதாசிவம், சுந்தர்ராஜ் மாவட்ட விளையாட்டு துறையின் மாவட்ட தலைவர் தாஸ சத்தியன், செயலாளர் பார்த்திபன், வெங்கடேஷ், நிர்வாகிகள் ஜெய்சங்கர், வெங்கட்ராமன், ஜெகதீஷ், சரவணன், முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu