விழுப்புரம் மாவட்டத்தில் 5 மையங்களில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 5 மையங்களில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரம் மாவட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் ஆர்.கண்ணப்பன் தலைமை தாங்கினார், ஆர்பாட்டத்தில் சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, சிபிஐ மாவட்ட செயலாளர் ஆ.சவுரிராஜன், விசிக மாவட்ட செயலாளர் சு.ஆற்றலரசு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

திருவெண்ணெய்நல்லூரில் இடதுசாரி கட்சிகளான சிபிஎம்,சிபிஐ,சிபிஐ(எம்எல்), SUCI மற்றும் விசிக சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சிபிஐ ஒன்றிய செயலாளர் என்.நாராயணன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் ஆ.சவுரிராஜன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.வேல்மாறன், விசிக மாவட்ட பொருளாளர் இளங்கோவன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.சிவக்குமார், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

விக்கிரவாண்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் சிபிஐ வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது, ஆர்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு எஸ்.முத்துகுமரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சித்ரா, ஒன்றிய செயலாளர் வி.கிருஷணராஜ்,சிபிஐ ஆர்.கலியமூர்த்தி,விசிக ஒன்றிய செயலாளர் வெற்றி வேந்தன்,, ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!