வரும் பிப். 1 ல் சிறை நிரப்பும் போராட்டம்; ஆசிரியர்கள் முடிவு
விழுப்புரத்தில் ஆசிரியர்கள், மகளிர், ஊர்நல அலுவலர்கள், மேற்பார்வையர் சங்கத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் ஆசிரியர்கள், மகளிர், ஊர்நல அலுவலர்கள், மேற்பார்வையர் சங்கத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் சங்கர் பாபு தலைமை வகித்தார். கூட்டத்தில் அரசு ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர், மேற்பார்வையாளர் சங்கத்தினர் பங்கேற்றனர்.
2009 நவம்பர் 21ல் நடைபெற்ற அரசு ஊழியர் - ஆசிரியர் சங்க மாநாட்டில் அறிவித்து, வெளியிட்ட அரசாணை எண் 6 சமூக நலத்துறை நாள் 06-01 2010ன்படி சத்துணவு பணிக்காலம் 50 சதவீதம், ஆசிரியர், ஜி .எஸ்/ எம் .எஸ் /சி. என். ஐ /சி. என். எஸ். ஆகிய நிரந்தர பணிக்காலத்துடன் கணக்கிட்டு பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையாளர் ரத்னா, அரசுக்கு பரிந்துரைத்த குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் , மருத்துவ காப்பீடு திட்டம் , அகவிலைப்படி வழங்க வேண்டும்.
இந்த தீர்மானங்களை அரசு போர்க்கால அடிப்படையில், வரும் 2023 நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்றிட வலியுறுத்தி பிப்ரவரி 1ல் சென்னை சமூக நலத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு, மறியல் செய்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என ஏக மனதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் செயலாளர் ராதா, மணி உட்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.
இச்சங்கத்தினர் பல்வேறு நிலைகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தி விட்டனர் ஆனால் அரசு இதுவரை இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதால், வரும் பிப்ரவரி 1ம் தேதி சிறைநிரப்பும் போராட்டத்தை அறிவித்து நடத்த உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu