விழுப்புரத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

விழுப்புரத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
X

மருதூர் பாரதியார் தெருவில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினை ஆட்சியர் த.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நகரத்தில் ஆட்சியர் அங்கன்வாடியில் திடீர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மருதூர் பாரதியார் தெருவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினை ஆட்சியர் த.மோகன் இன்று (01.09.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது ஆய்வின்போது அங்கன்வாடி மையத்திலிருந்த குழந்தைகளுடன் ஆட்சியர் த.மோகன் அங்கு வழங்கப்பட்ட மதிய உணவினை சாப்பிட்டு தரத்தினை ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார்.

மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story