சென்னை கைவினை பொருள் கண்காட்சியில் பங்கேற்க கலெக்டர் வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.
Handicraft Exhibition - விழுப்புரம் மகளிர் சுய உதவிக்குழுக்களில் இடம்பெற்றுள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் சிறப்புவாய்ந்த மற்றும் தரமுள்ள உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திட ஏதுவாக 2022-2023-ம் ஆண்டில் மதிசாராஸ் மேளா வருகிற 25.8.2022 முதல் 7.9.2022 வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
கைவினை பொருட்கள் மாநில அளவில் நடைபெற உள்ள இக்கண்காட்சியில் சுய உதவிக் குழுக்களில் உற்பத்தி செய்யப்படும் கண்கவர் கைவினைப்பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், பனை பொருட்கள், ஆடை ஆபரணங்கள், பாரம்பரிய உணவுப்பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்கள் இடம்பெறுவதோடு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியே அரங்குகள் ஒதுக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் கண்காட்சியாக நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மேற்கண்ட கண்காட்சியில் பங்கு பெறச்செய்யலாம். இக்கண்காட்சியில் பங்கு பெறுவதற்காக எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. முற்றிலும் இலவசமாக பங்கேற்கலாம். இதில் பங்கேற்க உள்ள சுய உதவிக்குழுக்கள் விழுப்புரம் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்புகொண்டு மாநில அளவில் நடைபெறும் கண்காட்சியில் கலந்துகொள்ள ஏதுவாக பதிவு செய்துகொள்ளலாம். மேலும் தகவல் அறிந்துகொள்ள 04146-223736, 94440 94479 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu