மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கே வந்து மனு பெற்ற கலெக்டர்

மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கே வந்து மனு பெற்ற கலெக்டர்
X

மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெறும் கலெக்டர் மோகன், 

மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கே வந்து மனு பெற்ற கலெக்டர் மோகன்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் தலைமையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது,

இந்நிலையில் திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகள் தரை தளத்தில் நாற்காலியில் அமரவைக்கப்பட்டனர், கலெக்டர் மோகன் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கே இறங்கி வந்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!