வெள்ளபகுதிகளை ஆய்வு செய்ய ஆறு கி.மீ நடந்து சென்ற ஆட்சியர்

வெள்ளபகுதிகளை ஆய்வு செய்ய ஆறு கி.மீ  நடந்து சென்ற ஆட்சியர்
X

ஆய்வு பணிகள் மேற்கொள்ள ஆறு கிலோமீட்டர் நடந்து சென்ற கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் தண்ணீர் தேங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆட்சியர் நேரில் சென்று செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட கோலியனூர் ஒன்றியம்,தளவானூர் கிராமத்தை தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் சூழ்ந்து அக்கிராம மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் மோகன் உடனடியாக அந்த கிராமத்திற்கு பில்லூர் தென்குச்சி பாளையம் வழியாக ஒரு வழிப்பாதையில் 6 கிலோ மீட்டர் நடந்தே சென்று வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிக்கு சென்றார்.

அங்கு சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு, அங்கு உள்ள மக்கள் நிலைகளை ஆய்வு செய்து நிவாரண பணிகளை துரிதப்படுத்தினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!