விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

விழுப்புரம் வாக்காளர் பட்டியலை வெளியிடும் கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின்படி 2.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் இந்த வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் த.மோகன் வியாழக்கிழமை வெளியிட்டார். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டு ஆட்சியர் மோகன் பேசுகையில்

விழுப்புரம் மாவட்டத்தில்உள்ள நகர்ப்புற உள்ளாட்சிஅமைப்புகளின் தேர்தலுக்காக கடந்த நவம்பர் 1ஆம் தேதி நாளிட்ட ஒருங்கிணைந்த சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் மொத்தம் 2 லட்சத்து 69 ஆயிரத்து 513 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 441 ஆண்கள், 1 லட்சத்து 39 ஆயிரத்து 19 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 53 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இம்மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் என இரு நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்கிறது. இதன்படி, விழுப்புரம் நகராட்சியில் 61 ஆயிரத்து 764 ஆண்கள், 65 ஆயிரத்து 343 பெண்கள், 25 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 132 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல, திண்டிவனம் நகராட்சியில், 27 ஆயிரத்து 990 ஆண்கள், 30 ஆயிரத்து 441 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 58 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர்.

அனந்தபுரம் பேரூராட்சியில் 2,654 ஆண்கள், 2,726 பெண்கள் என மொத்தம் 5,380 வாக்காளர்கள்,

அரகண்டநல்லூர் பேரூராட்சியில் 2,347 ஆண்கள், 2,424 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 4,725 வாக்காளர்கள், செஞ்சி பேரூராட்சியில் 11,325 ஆண்கள், 12,191 பெண்கள் 20 என 23,536 வாக்காளர்கள்,

மரக்காணம் பேரூராட்சியில் 8,579 ஆண்கள், 9,359 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 17,939 வாக்காளர்கள், திருவெண்ய்நல்லூர் பேரூராட்சியில் 4,040 ஆண்கள், 4,105 பெண்கள் என மொத்தம் 8,145 வாக்காளர்கள், வளவனூர் பேரூராட்சியில் 7,030 ஆண்கள், 7,452 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,485 வாக்காளர்கள், விக்கிரவாண்டி பேரூராட்சியில் 4,712 ஆண்கள், 4,978 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 9,691 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தேர்தல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக அலுவலர் (தேர்தல்) கிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், மகளிர் திட்டஅலுவலர் பூ.காஞ்சனா, நகராட்சிஆணையர்கள் போ.வி.சுரேந்திரஷா (விழுப்புரம்), சௌந்தரராஜன் (திண்டிவனம்), பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!