ரேசன் கடை புகார்: விழுப்புரம் ஆட்சியர் நேரில் ஆய்வு

ரேசன் கடை புகார்: விழுப்புரம் ஆட்சியர் நேரில் ஆய்வு
X

நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்ட  விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த. மோகன் , பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் குறைபாடுகள் குறித்த புகாரை தொடர்ந்து ஆட்சியர் மோகன் நேரில் ஆய்வு செய்தார்

நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, பாமாயில் சரிவர கிடைக்கப் பெறவில்லை என புகாா் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் மோகன் கூட்டுறவுத் துறை, மாவட்ட வழங்கல் துறை அலுவலா்கள் முன்னிலையில் கூட்டுறவு துணைப் பதிவாளா் (உணவு விநியோகப் பிரிவு) அலுவலகத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, இந்தப் பகுதியிலுள்ள நியாய விலைக் கடைகளுக்கு மாதந்தோறும் உணவுப் பொருள்கள் சரியாக வழங்கப்படுகிறதா என பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன் பாமாயில் இருப்பு குறித்தும் ஆய்வுசெய்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், நியாய விலைக் கடைகள் மூலம் ஒவ்வொரு மாதமும் பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதை கூட்டுறவுத் துறை, மாவட்ட வழங்கல் துறையினா் உறுதிசெய்ய வேண்டும். மாவட்ட நுகா்பொருள் வாணிபக் கழகத்துறை நியாய விலைக் கடைகளுக்கு பொருள்களை சரியான காலத்தில் வழங்க வேண்டும். பொருள்களுக்கு பற்றாக்குறை ஏற்படுவதை கண்டறிந்தால் முன்கூட்டியே தேவையான அளவை பதிவுசெய்து பொருள்களை பெற்று கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். நியாய விலைக் கடைகளில் பொருள்கள் பற்றாக்குறை என பொதுமக்கள் மீண்டும் புகாா் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மோகன் தெரிவித்தார்.

ஆய்வின்போது, மகளிா் திட்ட இயக்குநா் காஞ்சனா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாலமுருகன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலா் மகாராணி ஆகியோா் உடனிருந்தனா்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil