கண்டாச்சிபுரம் ஊராட்சியில் புதிய பாலம் கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு

கண்டாச்சிபுரம் ஊராட்சியில் புதிய பாலம் கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்.

கண்டாச்சிபுரம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கண்டாச்சிபுரம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கண்டாச்சிபுரம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2021 - 2022 பொதுநிதியின்கீழ் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, திட்டமிட்ட காலத்திற்குள் பணியை முடிக்க அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வகுப்பறைக்குச் சென்று மாணவ, மாணவியர்களின் கல்வித்திறன் குறித்து கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து, கண்டாச்சிபுரம் ஊராட்சியில், ஓடைப்பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு இப்பாலத்தை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் ஆதிசக்தி சிவக்குமார் மன்னன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாம்ராஜ், சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!