விழுப்புரத்தில் பள்ளி தூய்மை பணியை தொடங்கிய வைத்த ஆட்சியர்

விழுப்புரத்தில் பள்ளி தூய்மை பணியை தொடங்கிய வைத்த ஆட்சியர்
X

பள்ளி தூய்மை பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்து பள்ளி தூய்மை பணிகளை ஆட்சியர் மோகன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வரும் 13 ந்தேதி திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளியில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து தூய்மைப்பணி மேற்கொள்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், நேரில் சென்று தூய்மை பணியில் ஈடுபட்டு, அந்த பணியை தொடங்கி வைத்தார்,

தொடர்ந்து பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் நகர் மன்ற தலைவர் திருமதி.தமிழ்ச்செல்வி ஆகியோர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!