ஆதிதிராவிடர் நல பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

ஆதிதிராவிடர் நல பள்ளியில் ஆட்சியர் ஆய்வு
X
விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்பப் பள்ளியில் ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நகராட்சி, வழுதரெட்டி பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.

அப்போது அங்குள்ள பள்ளி வளாகம், வகுப்பறை, சமையல் கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு நாள்தோறும் தூய்மைப்பணியாளர்களை கொண்டு தூய்மைப்பணியை மேற்கொண்டு பள்ளியை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

மேலும் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியை அவ்வப்போது பிளீச்சிங் பவுடர் கொண்டு தூய்மைப்படுத்தும்படியும், கழிவறையை சுத்தமாக வைத்துக்கொள்ளும்படியும் உத்தரவிட்டதோடு பள்ளி வளாகத்தை எவ்வாறு தூய்மையாக வைத்துக்கொள்வது என்ற விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து விழுப்புரம் பீமநாயக்கன்தோப்பு பகுதியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான சமையலறை கூடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரகுகுமார், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil