விழுப்புரம் மாவட்டத்தில் தொழிற் பள்ளி தொடங்க கலெக்டர் மோகன் அழைப்பு
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன்.
விழுப்புரம் மாவட்டத்தில் 2022-2023ஆம் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தி குறிப்பில் விழுப்புரம் மாவட்டத்தில், 2022-2023ஆம் கல்வியாண்டிற்கு 01.07.2022 முதல் புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள், தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் ஜனவரி 2022 முதல் 30.4.2022 நள்ளிரவு 11.59 மணி முடிய www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் 30.04.2022க்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு, இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஆலந்தூர்ரோடு, கிண்டி, சென்னை-32 தொலைபேசி எண்: 044-22501006 மற்றும் மண்டல பயிற்சி இணை இயக்குநர், மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம், 58/234, பழைய சென்னை சாலை, காட்பாடி இரயில்வேகேட் அருகில், விழுப்புரம்-605 602 தொலைபேசி எண்: 04146-290673 என்ற முகவரியில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu