கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: விழுப்புரம் கலெக்டர் அறிவுறுத்தல்

கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்:  விழுப்புரம் கலெக்டர் அறிவுறுத்தல்
X

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்திய கலெக்டர் மோகன் 

தொற்று பரவுவதை தவிர்க்க அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், விழுப்புரம் கலெக்டர் மோகன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

விழுப்புரம் நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் முகக் கவசம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாவட்ட கலெக்டர் மோகன் இன்று ஈடுபட்டார்,

விழுப்புரம் பழைய பேருந்து நிலைய பகுதியில் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி கட்டாயம் முகக்கவசம் அணிந்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.மோகன் அறிவுறுத்தினார்,

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திஷா ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!