படியில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
X
படியில் பயணம் செய்பவர்களுக்கு அறிவுரை வழங்கிய கலெக்டர் மோகன்
By - P.Ponnusamy, Reporter |24 Nov 2021 8:15 PM IST
விழுப்புரம் மாவட்டத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு ஆட்சியர் மோகன் அறிவுரை கூறினார்
திருக்கோவிலிருந்து முகையூர் - மாம்பழப்பட்டு வழியாக விழுப்புரம் செல்லும் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி அப்பகுதி மாணவர்கள் பயணம் செய்வதனை அவ்வழியாக சென்ற மாவட்ட ஆட்சியர் மோகன் கவனித்தார்.
உடனடியாக அந்த பேருந்தினை நிறுத்திய மாவட்ட ஆட்சியர் மோகன், மாணவர்கள் மற்றும் பேருந்து பயணிகளிடம் இதுபோன்ற ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர் உடனிருந்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu