புத்தகத் திருவிழாவில் புத்தகம் வெளியிட ஆட்சியர் அழைப்பு

புத்தகத் திருவிழாவில் புத்தகம் வெளியிட ஆட்சியர் அழைப்பு
X

விழுப்பரம் கலெக்டர் பழனி (கோப்பு படம்)

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நடக்கவுள்ள புத்தக திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளர்கள் புத்தகம் வெளியிடலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் வரும் மார்ச்.25-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம்தேதி வரை நடைபெறும் புத்தக திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளர்கள் புத்தகங்களை வெளியிட, மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம் என, ஆட்சியர் பழனி தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் புத்தக திருவிழா விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் வருகிற 25-ம் தேதி முதல் தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த புத்தக திருவிழாவில் 100 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் கண்டுகளித்திட முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தினந்தோறும் வாசிப்புத்திறனை மேன்மைப்படுத்த பெருந்திரள் வாசிப்பும், தனித்திறன்களை வெளிக்கொணருவதற்கான பல்வேறு தனித்திறன் போட்டிகளும், தினமும் மாலை பல்வேறு எழுத்தாளர்கள், சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம் மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

மேலும் புத்தக திருவிழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் உள்ளூர் எழுத்தாளர்களை சிறப்பிக்கும் வகையில் வெளியிடத்தயார் நிலையில் உள்ள எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளியிடப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே புத்தகத்தை வெளியிட விரும்பும் எழுத்தாளர்கள் மாவட்ட ஆட்சியரின் பொது பிரிவு நேர்முக உதவியாளரை புத்தகத்தின் இரண்டு பிரதிகளுடன் நேரில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அந்த செய்தி குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.

இந்தப் புத்தக திருவிழா விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகரத்தில் முதன்முதலாக நடைபெறுவது பெருமைக்குரியது இந்த புத்தகத் திருவிழாவில் பல்வேறு எழுத்தாளர்களின் சமூகம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் இடம் பெற உள்ளன அதனால் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கல்வியாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டு புத்தகங்களை பார்வையிட்டு தேவையான புத்தகங்களை பெற்று பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதனால் மாவட்ட மக்கள் விழுப்புரம் நகரத்தில் புத்தகத் திருவிழா தொடங்கும் நாளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் அந்த புத்தகத் திருவிழாவில் நடக்க உள்ள சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை காண்பதற்கு மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகிய பெரும்பாலானார் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் இதற்கான ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

Next Story
சத்தியமங்கலத்தில் விசிக ஆர்ப்பாட்டம்...! அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்கள்..!