விழுப்புரம் அருகே தரைப்பாலம் உடைப்பு: கலெக்டர் நேரில் ஆய்வு

விழுப்புரம் அருகே தரைப்பாலம் உடைப்பு:  கலெக்டர் நேரில் ஆய்வு
X

உடைந்திருக்கும் தரைப்பாலத்தை ஆய்வு செய்த கலெக்டர் மோகன் 

விழுப்புரம் அருகே கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சேதமடைந்த தரைப்பாலத்தை கலெக்டர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், திருப்பாச்சனூர் பகுதியில் நேற்று பெய்த மழையினால் தரைப்பாலத்தின் தடுப்பு சுவரில் சிறிய அளவில உடைப்பு ஏற்பட்டது.

இதனை அறிந்த மாவட்ட கலெக்டர் த.மோகன் இன்று (30.10.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, உடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிவசேனா, உதவி கோட்டப் பொறியாளர் தன்ராஜ், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனா்.

Tags

Next Story
ai based agriculture in india