நகராட்சி பகுதியில் வாய்க்கால் சீரமைப்பு: கலெக்டர் ஆய்வு

நகராட்சி பகுதியில் வாய்க்கால் சீரமைப்பு: கலெக்டர் ஆய்வு
X

கால்வாய் தூர்வாரும் பணியை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மோகன்

விழுப்புரம் நகராட்சி பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் வடியாததை தொடர்ந்து வாய்க்கால் சீரமைக்கும் பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழைநீர் வாய்க்கால்களில் நீர் வெளியேற முடியாததால், நகரம் முழுவதும் மழைநீர் தேங்கி கிடந்தது.

இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மோகன் நகராட்சி பகுதியில் வாய்க்கால்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். இன்று தேர் பிள்ளையார் கோயில் அருகே தண்ணீர் வெளியேறும் வாய்க்கால்களை சீரமைக்கும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க கூறினார். அப்போது மாவட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!