நூறுநாள் பணியாளர்களிடம் தடுப்பூசி போட்டீர்களா என கலெக்டர் விசாரணை

நூறுநாள் பணியாளர்களிடம் தடுப்பூசி போட்டீர்களா என கலெக்டர் விசாரணை
X

100 நாள் பணியாளர்களிடம் தடுப்பூசி குறித்து கேட்டறிந்த கலெக்டர். 

நூறுநாள் பணியில் ஈடுபட்டு இருந்த பணியாளர்களிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா என மாவட்ட கலெக்டர் மோகன் கேட்டறிந்தார்.

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம், ஒலக்கூர் ஊராட்சியில் மேய்க்கால் புறம்போக்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.39.8 லட்சம் மதிப்பீட்டில் கசிவுநீர் குட்டை அமைக்கும் பணியை கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா என கேட்டறிந்தார். உடன் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!