தாட்கோ கடன் உதவி பெற எஸ்சி- எஸ்டி பிரிவினருக்கு ஆட்சியர் அழைப்பு

தாட்கோ கடன் உதவி பெற எஸ்சி- எஸ்டி பிரிவினருக்கு ஆட்சியர் அழைப்பு
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த. மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எஸ்சி எஸ்டி பிரிவினர் தாட்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல்

தாட்கோ மூலம் கடன் பெற தலித் மற்றும் பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட தகவல்: விழுப்புரம் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள ஆதிதிராவி டா்கள் மற்றும் பழங்குடியினா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிலம் வாங்குதல், நிலம் மேம்பாட்டுத் திட்டம், துரித மின் இணைப்பு, கிணறு அமைத்தல் திட்டம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோா் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு18 முதல் 65 வயது வரை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வருமான வரம்பு ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.இதேபோல், இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருத்துவ மையம், மருந்தகம், கண் கண்ணாடியகம், முடநீக்க மையம், ரத்தப் பரிசோதனை நிலையம் போன்றவைக்கு வயது வரம்பு 18 முதல் 45 வரை ஆகும்.

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு பொருளாதார கடனுதவி மானியம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தாட்கோ இணையதயள முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.மேலும், விண்ணப்பதாரா்கள் பற்றிய முழு விவரங்கள், புகைப்படம், ஜாதி சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, விலைப்புள்ளி, விண்ணப்பதாரரின் தொலைபேசி/ கைப்பேசி, மின்னஞ்சல் முகவரி, திட்ட அறிக்கை, மற்றும் பட்டா சிட்டா விவரங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் மோகன் அதில் தெரிவித்துள்ளாா்.

Tags

Next Story