விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து சிஐடியு ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரத்தில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிஐடியு முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் சங்கத்தினர் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.முத்துகுமரன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் விபத்து மரண இழப்பீடு

ஆன்லைன் பதிவு புதுப்பித்தல் கேட்டு மனுக்கள் பெறுதலில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து நலவாரிய மனுக்களை நேரடியாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

சிஐடியு நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் பி.குமார், மாவட்ட பொருளாளர் வி.பாலகிருஷ்ணன் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!