மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் சிஐடியு ஆர்ப்பாட்டம்
X
விழுப்புரத்தில் சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமை தாங்கினார், சிஐடியு நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி, பொருளாளர் வி.பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் பி.குமார், எம்.சௌந்தராஜன்,இன்ஸ்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க பாலு, பிஎஸ்என்எல் சங்க மேகநாதன், அரசு போக்குவரத்து கழக சங்க ரகோத்தமன், மின் ஊழியர் மத்திய அமைப்பு சேகர்,லிகாய் ரமேஷ், மருந்து விற்பனை சங்க பாலசுப்பிரமணியன், ஆட்டோ சங்க செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!