விழுப்புரம்: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து வாகன நிறுத்த போராட்டம்

விழுப்புரம்: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து வாகன நிறுத்த போராட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு. சங்கத்தினர். 

விழுப்புரத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, சிஐடியு சார்பில், வாகன நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய அரசின் கலால் வரியை குறைக்க வலியுறுத்தியும், விழுப்புரம் சிக்னல் அருகே, சிஐடியு சங்கத்தினர் வாகன நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட செயலளர் ஆர்.மூர்த்தி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட பொருளாளர் வி.பாலசுப்பிரமணியன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் முருகன், மருந்து விற்பனைப் பிரதிநிதி சங்க மாவட்ட செயலாளர் அருள்ஜோதி, அரசுப் போக்குவரத்துக் கழகம் இளம்பரிதி உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி, வாகன ஓட்டிகளுக்கு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கலால் வரியை குறைக்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai in future agriculture