விழுப்புரம் அருகே இருளர் இன மக்களுடன் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

விழுப்புரம் அருகே இருளர் இன மக்களுடன் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
X

விழுப்புரம் அருகே ஜே. ஆர். சி. அமைப்பினர் இருளர் இன மக்களுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.

விழுப்புரம் அருகே இருளர் இன மக்களுடன் குழந்தைகள் தின விழா ஜே.ஆர்.சி. சார்பில் கொண்டாடப்பட்டது.

மறைந்த இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காரை, மட்டப்பாறை,செ. குன்னத்தூர் ஆகிய கிராமங்களிலுள்ள பழங்குடியினர் குடியிருப்பில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழுப்புரம் கல்வி மாவட்டம் , ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் , மாவட்டக் கன்வீனர் முனைவர் பாபு செல்வதுரை தலைமையில் பழங்குடி இருளர் இன மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று குழந்தைகள் தின விழா மற்றும் குடும்ப நல உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட இணை கன்வீனர் இரவீந்திரன், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் எட்வின், சரசு,மரிய ஜோசப், தனராஜ், ஆலோசகர் அசீனா ஆகியோர் இணைந்து 50 குடும்பத்தினருக்கு அரிசி, புதிய ஆடைகள் , பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் 70 நபர்களுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருட்கள், மற்றும் இனிப்பு வழங்கி குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.

இதேபோன்று கடந்த கொரோனா காலத்திலும் பழங்குடி இருளர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று பல்வேறு உதவிகளை இவ்வமைப்பினர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையில் உள்ள ஆசிரியர்களில் ஜே.ஆர் சி அமைப்பினரின் சமூக சேவையானது பாராட்டுக்குறியது. இதுபோன்ற ஆசிரியர்களை சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பாராட்டுகின்றனர். இருப்பினும் துறை சார்பில் பாராட்டினால் இன்னும் அதிக ஆசிரியர்கள் மக்கள் பணியாற்றிட விழுப்புரம் மாவட்டத்தில் முன்வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பினர் மாவட்ட கன்வீனர் முனைவர்.பாபு செல்லத்துரை தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா காலத்தில் கொரோனா நோய் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அடிப்படை சுகாதார பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வந்தனர் மேலும் ரெட் கிராஸ் அமைப்பினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பல ஏழை எளிய சமூகத்தினரை கண்டறிந்து நல உதவிகளை செய்து வருகின்றனர்.

மேலும் கொரோனா காலத்தில் விழிப்புணர்வு பணிகளை ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பினரும் முன் நின்று செய்தனர். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்கள். அவர்களின் பணியை பாராட்டி மாவட்ட நிர்வாகமும் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் கல்வித்துறையில் ஜூனியர் ரெட் கிராஸ் மிகவும் சிறப்பான ஒரு மக்கள் தொண்டு பணிகளை முன்னெடுத்து செய்து வருவது பாராட்டு க்குரியது என பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!