குழந்தையானார் விழுப்புரம் கலெக்டர் : கேக் வெட்டி குழந்தைகள் தினம் கொண்டாடினார்

குழந்தையானார் விழுப்புரம் கலெக்டர் : கேக் வெட்டி குழந்தைகள் தினம்  கொண்டாடினார்
X

குழந்தைகள் தினவிழாவை குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தினத்தை கேக் வெட்டி ஆட்சியர் மோகன் குழந்தைகளுடன் கொண்டாடினார்.

இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவகர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றே குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.

சைல்டு லைன் 1098 (ஏ.ஆர்.எம்) தொண்டு நிறுவனம் சார்பாக நடந்த இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் த.மோகன் குழந்தையாக மாறி மகிழ்ச்சியோடு குழந்தைகளுடன் கேக் வெட்டி குழந்தைகளுக்கு கொடுத்தார். அவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அப்போது திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!