முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாயகன் -கனிமாெழி

முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாயகன் -கனிமாெழி
X

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அடிக்கல்நாயகன் என்ற பட்டம் வழங்கலாம் என விழுப்புரத்தில் திமுக எம்பி.,கனிமாெழி கூறினார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் அருகே கெடாரில் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தி, கோலியனூரில் விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் லட்சுமணன் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி பேசியது:

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எதையும் பெரிதாக செய்துவிடவில்லை. பயனில்லாத ஒரு ஆட்சியாகத்தான் பழனிசாமியின் ஆட்சி இருந்தது.திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் இருந்தது. ஆனால், இன்றைக்கு அதிமுக ஆட்சியில் மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது.தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் இருந்தால்தான் அனைவருக்கும் வேலை கிடைக்கும். தொழில் வளர்ச்சியில் தமிழகம் 14ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது.தமிழ் பேசக்கூடியள் யாரும் இன்றைக்கு தமிழக அரசின் பணிகளில் இல்லை. எங்கு பார்த்தாலும் வட மாநிலத்தவர்களே இருக்கிறார்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் ஸ்கூட்டி, செல்போன் போன்றவை எல்லாம் கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால், அதையெல்லாம் கொடுத்தார்களா என்றால் இல்லை என்பதுதான் பதில். கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் அதைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். அதிமுக ஆட்சியில் திட்டங்கள் பயன்பாட்டிற்கு வருகிறதாே இல்லையோ அதிகளவு அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர். எனவே முதல்வர் பழனிச்சாமிக்கு அடிக்கல் நாயகன் என்ற பட்டம் வழங்கலாம் என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்