விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் கோலப்போட்டி

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் கோலப்போட்டி
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.

விழுப்புரத்தில் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் செஸ் போட்டிக்கான விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்ட மகளிர் திட்டமும், வாழ்ந்து காட்டுவோம் திட்டமும் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களிடையே கோலப்போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து பல்வேறு சுயஉதவிகுழுவினர் கலந்துகொண்டு ஒலிம்பியாட் போட்டி தொடர்பான கோலங்களை பல்வேறு வண்ணங்களில் வரைந்தனர். இதில் சிறந்த முறையில் கோலங்கள் வரைந்த 3 குழுக்களுக்கு அவர்களை பாராட்டும் விதமாக மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பரமேஸ்வரி பரிசு வழங்கினார்.

Tags

Next Story
ai marketing future