பெண் விஏஓவிடம் மோசடி: கணவர் உட்பட நாலு பேர் மீது வழக்கு

பெண் விஏஓவிடம் மோசடி:  கணவர் உட்பட நாலு பேர் மீது வழக்கு
X

காட்சி படம் 

விழுப்புரத்தில் விஏஓ வாக இருக்கும் பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட கணவர் உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

விழுப்புரம் பகுதியை சேர்ந்த 41 வயது பெண், மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இவருடைய முதல் கணவர் கடந்த 2008-ல் இறந்து விட்டார். அதன் பிறகு அவரை அவரது கணவரின் தம்பியான கெங்கராம்பாளையத்தை சேர்ந்த முரளிதரன்(37) என்பவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்தனர். 10 ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில் மாலதியிடம் முரளிதரன், தான் தொழில் தொடங்கப்போவதாக கூறி ரூ.18 லட்சமும், 40 பவுன் நகையையும் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் 25.1.2022 அன்று விஜயலட்சுமி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். சம்பவத்தன்று மாலதி, முரளிதரனிடம் சென்று தன்னிடம் வாங்கிய பணம், நகையை திருப்பித்தரும்படி கேட்டுள்ளார்.

அதற்கு முரளிதரன், விஜயலட்சுமி, முரளிதரனின் தந்தை ராமச்சந்திரன், தாய் வள்ளி ஆகியோர் சேர்ந்து மாலதியை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மாலதி கொடுத்த புகாரின் பேரில் முரளிதரன் உள்ளிட்ட 4 பேர் மீதும் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story