வெற்றி வாய்ப்பு: திமுக வேட்பாளர் பேட்டி

சட்டமன்ற வாக்கு பதிவு நெருங்கி வரும் நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை திமுக வேட்பாளர் லட்சுமணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறுகையில் தமிழகம் முழுவதும் அரசுக்கு எதிராகவும், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிராகவும் அலை வீசுகிறது. நான் விழுப்புரம் தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று வந்தால் கடந்த பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருக்கும் புதிய பேருந்து நிலையத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன்.
விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுற்றுவட்டச்சாலை அமைக்கப்படும். விரிவாக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.வாடகை கார், வேன்களுக்குத் தனி இடம், மீன், காய்கறி அங்காடி அமைக்க அவர்களின் கருத்து கேட்டு தனி இடம் அமைத்துத் தரப்படும். மேலும் நகரில் சமுதாயக்கூடம், நூலகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், மியூசியம் அமைக்கப்படும். கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.நகர வியாபாரிகள் நலன் பாதுகாக்க படும், என்றார் மேலும் செய்தியாளர்கள் தொகுதியில் பட்டுவாடா நடப்பதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு
வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதாக சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரான ஆட்சியர் அண்ணாதுரையிடம் புகார் அளித்துள்ளோம், இதுவரை நடவடிக்கை இல்லை. வன்னியர்களுக்காக 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது முன்பு குளத்தில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டது. தற்போது குளத்தில் இருந்து சொம்பில் எடுக்கப்படும் இதனை மக்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால் விழுப்புரம் தொகுதியில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது என திமுக வேட்பாளர் லட்சுமணன் பேட்டியில் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu