விழுப்புரம் நகராட்சி பள்ளியில் காலை சிற்றுண்டி கட்டிட பணியை சேர்மன் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி பள்ளியில் காலை சிற்றுண்டி கட்டிட பணியை சேர்மன் ஆய்வு
X

விழுப்புரம் நகராட்சி பள்ளியில் காலை சிற்றுண்டிக்கான கட்டிடம் கட்டுமான பணியை  சேர்மன் தமிழ்ச்செல்வி ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கும் சிற்றுண்டி கட்டிடப் பணியை நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நகராட்சி பகுதியில் 13 பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள 1,500 மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், நரசிங்கபுரம் பகுதியிலும் நகராட்சி சார்பில் தலா ரூ.23 லட்சம் மதிப்பில் பொது சமையல் அறை கூடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணியை நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சமையல் அறை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், அதே நேரத்தில் அடிப்படை வசதிகளுடன் தரமான முறையில் கட்டவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் ஜோதிமணி, தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, வார்டு செயலாளர் குமார், வார்டு கவுன்சிலர் மகிமை பிரிஜித் பிரியாபிரேம், அரசு ஒப்பந்ததாரர் கோவிந்தராஜ், வார்டு நிர்வாகிகள் தண்டபாணி, வின்சென்ட்ராஜ், சசி, வீரப்பன் உள்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!