திருக்குறள் ஒப்புவித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கிய கலெக்டர் மோகன்

திருக்குறள் ஒப்புவித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கிய கலெக்டர் மோகன்
X

திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய கலெக்டர் மோகன் 

விழுப்புரத்தில் 1330 குறட்பாக்கள் ஒப்புவித்த 23 பள்ளி மாணவ. மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை கலெக்டர் மோகன் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ் வளர்ச்சித் தொடர்பான பல்வேறு திட்டங்களையும், அறிவிப்புகளையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு திருக்குறளின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும் வகையில் 1330 குறட்பாக்களை ஒப்புவிப்பு செய்யும் திருக்குறள் முற்றோதல் தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது,

1330 குறட்பாக்களை ஒப்புவிப்பு செய்யும் திருக்குறள் முற்றோதல் தேர்வில் 23 தனியார் மற்றும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தலா ரூ.10 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

கலெக்டர் பேசுகையில் மாணவ, மாணவியர்கள் திருக்குறளின் பொருளறிந்து கற்க வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு காலக் கட்டங்களிலும் திருக்குறளின் தெளிவுரைகள் நமக்கு பயனுள்ளதாக அமையும், இளமையில் கற்பது போல அனைத்து மாணவ, மாணவியர்களும் உலகம் போற்றும் பொதுமறை நூலான திருக்குறளை நன்கு கற்று தெரிந்து வாழ்வில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!