செல்போன் கடை பூட்டை உடைத்து செல்போன் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

செல்போன் கடை பூட்டை உடைத்து செல்போன் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
X

பைல் படம்.

Villupuram Police Station- வளவனூர் நகரப் பகுதியில் செல்போன் கடையை உடைத்து செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Villupuram Police Station- விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள அற்பிசம்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தயாளன் மகன் திலகராஜ் (வயது 30). இவர் வளவனூர் பஸ் நிறுத்தம் அருகில் பேரூராட்சிக்கு சொந்தமான கடையில் கடந்த 5 வருடமாக செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் விற்பனை முடிந்ததும் திலகராஜ், தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

இதனையடுத்து இன்று காலை 6 மணியளவில் இவருடைய கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை அவ்வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் ஒருவர் பார்த்து, திலகராஜிக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர், தனது கடைக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது கடையினுள் இருந்த 35 பழைய செல்போன்கள் மற்றும் 10 பவர் பேங்குகள் ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மேற்கண்ட பொருட்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும். இதுகுறித்து திலகராஜ், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!