விழுப்புரம் மாவட்டத்தில் 7 மையங்களில் சிபிஐ கட்சியினர் மறியல்

விழுப்புரம் மாவட்டத்தில் 7 மையங்களில் சிபிஐ கட்சியினர் மறியல்
X

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி விழுப்புரம் மாவட்டத்தில் 7 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்

விழுப்புரம் மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழு மையங்களில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் ‌கைது செய்தனர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 194பேர் கைது செய்யப்பட்டனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி விழுப்புரம் மாவட்டத்தில் 7 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 194 பேர் கைது செய்யப்பட்டனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின்சார திருத்த சட்டமசோதாவை திரும்ப பெற வேண்டும், உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், வருமானவரி செலுத்த இயலாத ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ. 7 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்

என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ஜெயச்சந்திரன், ஏழுமலை, வட்ட செயலாளர் நிதானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் செல்வம், திலகவதி,பிரபாகரன், ராமநாதன், மணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். உடனடியாக போலீசார் அவர்களை கைது செய்தனர்.இதே போன்று மாவட்டத்தில் 7 மைதானங்களில் மறியலில் ஈடுபட்ட 194 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil