அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கில் கைதான 8 பேரையும் காவலில் எடுத்த சிபிசிஐடி போலீஸார்!
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் வழக்கில் கைதானவர்களை நீதிமன்றத்தில் இருந்து சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்திரவதை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி உட்பட 8 பேரை போலீசார் 13 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை பொறுப்பெடுத்துக் கொண்ட சிபிசிஐடி போலீஸார், பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டுவர ஆசிரம நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, 8 பேரையும் காவலில் எடுக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 23ஆம் தேதி சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்தனர்,
அதனைத் தொடர்ந்து அந்த மனு மீது விசாரணை சனிக்கிழமை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நடைபெற்றது, அப்போது ஆசிரம நிர்வாகி ஜுபின் பேபி உட்பட 8 பேரை போலீஸார் நீதிபதி முன்னிலையில் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தினர், சிபிசிஐடி மனுவை விசாரணை செய்த நீதிபதி புஷ்பராணி சனிக்கிழமை 12 மணி முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி 10 மணி வரை சிபிசிஐடி காவலுக்கு அவர்கள் 8 பேரையும் அனுமதித்து உத்தரவிட்டார். மேலும் விசாரணை முடிந்ததும் அவர்களை 28 ஆம் தேதி 10 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் எனவும் சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அன்பு ஜோதி ஆசிரமத்தில் சித்திரவதை மற்றும் பாலியல் வன்கொடுமை இருந்ததாக நாடு முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதனால் மனித உரிமை ஆணையம் தானாகவே முன்வந்து இந்த வழக்கை கையில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்ததில் இருந்து இந்த வழக்கின் விசாரணை மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
அதன் வெளிப்பாடாக இன்று நீதிமன்றத்தில் அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதான 8 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு விவகாரம் விழுப்புரம் மாவட்டம் மட்டுமன்றி மாநிலம் விட்டு மாநிலம் தொடர்பு நிலை மாறி வருவதால் விசாரணையும் தமிழகம் மட்டுமின்றி பெங்களூரு உள்ளிட்ட மற்ற மாநிலங்களையும் விசாரணையை மேற்கொள்ள சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu