தரைப்பாலம் டேமேஜ், போக்குவரத்து பாதிப்பு

தரைப்பாலம் டேமேஜ், போக்குவரத்து பாதிப்பு
X
கோலியனூர் அருகே உடைந்த தரைப்பாலம்
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம்,திருப்பாச்சனூரில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் தரைப்பாலம் உடைந்தது.

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம்,திருபாச்சனூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறான மலட்டாற்றின் மீது அப்பகுதியில் உள்ள தளவானூர்,திருப்பாச்சனூர் உள்ளிட்ட கிராமங்கள் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல அந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்,

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக பெய்த கனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் வந்த அதிகப்படியான நீர்வரத்து காரணமாக, அதன் கிளை ஆறான மலட்டாற்றிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டது, அதனால் போக்குவரத்துக்கு பயனபெற்று வந்த அந்த தரைப்பாலம் திடிரென உடைந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்றது,

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இதனால் தளவானூர் கிராமம் துண்டிக்கப்பட்டது,உடனடியாக மாவட்ட ஆட்சியர் மோகன் அப்பகுதிக்கு சென்று வெள்ளநீரை பார்வையிட்டு, ஆய்வு செய்து, அம்மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

Tags

Next Story
ai solutions for small business