விழுப்புரத்தில் சாலைகளில் படுத்திருக்கும் மாடுகள்

விழுப்புரத்தில் சாலைகளில் படுத்திருக்கும் மாடுகள்
X

விழுப்புரத்தில் சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள் 

விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் இருக்கும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள விழுப்புரம்-புதுச்சேரி பிரதான சாலையில் புதிய பேருந்து நிலையம் தொடங்கி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, போக்குவரத்து சிக்னல், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மாடுகள் சாலையின் பெரும் பகுதியில் பகலிலேயே படுத்துள்ளன.

இதனால் அவ்வழியாக செல்லும் பேருந்து, பைக் போன்றவைகளை ஓட்டி செல்லும்,வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர், எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து மாடுகளை சாலையை விட்டு வெளியேற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், இன்று போக்குவரத்து காவல்துறை சிக்னல் அருகே சாலையில் படுத்து இருந்த மாடுகளை சாலையை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்