தீயால் பாதிக்கப்பட்ட பழங்குடி இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ்

தீயால் பாதிக்கப்பட்ட பழங்குடி இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ்
X
கோலியனூர் ஒன்றியம் இளங்காடு பகுதியில் தீயால் வீடிழந்த பழங்குடி இருளர் இன மக்களுக்கு கோட்டாட்சியர் இன்று ஜாதி சான்றிதழ் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இளங்காடு கிராமத்தில் பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்த சுப்புராயன் (வயது 59), செங்கேணி மனைவி செல்வி (38), கண்ணப்பன் (60), சந்திரன் (28), ஜெயக்குமார் (30), பிரகாஷ் (37), சிவராஜ் மனைவி சுமதி (60), முருகவேல் மனைவி ராதா (38) உள்ளிட்ட 14 குடும்பத்தினர் அங்கு சாலையோரமாக உள்ள இடத்தில் 8 குடிசை வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை சுப்புராயனின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென எரிந்த தீ அருகில் இருந்த மற்ற 7 குடிசைகளுக்கும் பரவியது. இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 8 குடிசை வீடுகளும் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.

இதில் வீடுகளில் இருந்த பீரோ, கட்டில், துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலானது. இதன் சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். லட்சுமணன் இதனிடையே தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் மோகன் இளங்காடு கிராமத்திற்கு நேரில் சென்று அங்கு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் அவர்களுக்கு அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வேட்டி சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் உடனடியாக வழங்கினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அங்கு உள்ள பழங்குடி இருளர்களுக்கு உடனடியாக வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் நேரில் சென்று சாதி சான்றிதழ் மற்றும் உணவு பொருட்களை வழங்கினார்.

Tags

Next Story
ai healthcare products